என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » மேகதாது அணை விவகாரம்
நீங்கள் தேடியது "மேகதாது அணை விவகாரம்"
மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக சிறப்பு சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். #MekedatuDam #PMModi #EdappadiPalaniswami
சென்னை:
தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற சிறப்பு கூட்டத்தில் மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்துக்கு அனைத்து கட்சிகளும் ஆதரவளித்தன.
இந்நிலையில், தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி இன்று ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், தமிழகத்தின் அனுமதியின்றி காவிரியில் எவ்வித கட்டுமான பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது என கர்நாடகா அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக சிறப்பு சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பிரதமருக்கு அனுப்பப்பட்டது. #MekedatuDam #PMModi #EdappadiPalaniswami
மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சி தொடர்பாக பிரதமருக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று கடிதம் எழுதி உள்ளார். #MekedatuDam #TNCM
சென்னை:
பெங்களூர் மக்களின் குடிநீர் தேவை மற்றும் மின்சார உற்பத்திக்காக காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதில் கர்நாடக அரசு தீவிரம் காட்டி வருகிறது. அணை கட்டினால் தமிழகத்திற்கு திறந்து விடப்படும் நீரின் அளவு குறையும் என தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதித்து கர்நாடக அரசு செயல்பட வேண்டும் என்றும் தொடர்ந்து கூறி வருகிறது.
இதையடுத்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார். அதில், மேகதாது அணை கட்டுவதற்கு தமிழகத்தின் ஒப்புதலை கர்நாடகம் பெறவில்லை என்றும், தமிழகத்தின் ஒப்புதல் இன்றி மேகதாதுவில் எந்தவிதமான கட்டுமான பணிகளும் மேற்கொள்ள அனுமதிக்கக் கூடாது என்றும் கூறியுள்ளார்.
கர்நாடக அரசின் நடவடிக்கை உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது. எனவே, மேகதாது விஷயத்தில் கர்நாடகாவின் அறிக்கையை மத்திய அரசு பரிசீலிக்க கூடாது என்றும் முதலமைச்சர் கூறியுள்ளார். #MekedatuDam #TNCM

இந்த எதிர்ப்புக்கு மத்தியில் மேகதாது அணை தொடர்பான செயல்திட்ட அறிக்கையை கர்நாடக அரசு மத்திய நீர்வள ஆணையத்திடம் தாக்கல் செய்துள்ளது. இந்த திட்டம் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்படி தமிழகம் மற்றும் கேரள அரசுகளை மத்திய நீர்வள ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.
இதையடுத்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார். அதில், மேகதாது அணை கட்டுவதற்கு தமிழகத்தின் ஒப்புதலை கர்நாடகம் பெறவில்லை என்றும், தமிழகத்தின் ஒப்புதல் இன்றி மேகதாதுவில் எந்தவிதமான கட்டுமான பணிகளும் மேற்கொள்ள அனுமதிக்கக் கூடாது என்றும் கூறியுள்ளார்.
கர்நாடக அரசின் நடவடிக்கை உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது. எனவே, மேகதாது விஷயத்தில் கர்நாடகாவின் அறிக்கையை மத்திய அரசு பரிசீலிக்க கூடாது என்றும் முதலமைச்சர் கூறியுள்ளார். #MekedatuDam #TNCM
×

X